ஐந்தாம்-திருமுறை

059 பொருமாற் றின்படை

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : மாற்பேறு

திருச்சிற்றம்பலம்

 

பொருமாற் றின்படை

  வேண்டிநற் பூம்புனல்

வருமாற் றின்மலர்

  கொண்டு வழிபடுங்

கருமாற் கின்னருள்

  செய்தவன் காண்டகு

திருமாற் பேறு

  தொழவினை தேயுமே.  1 

 

 

ஆலத் தார்நிழ

  லில்லறம் நால்வர்க்குக்

கோலத் தாலுரை

  செய்தவன் குற்றமில்

மாலுக் காரருள்

  செய்தவன் மாற்பேறு

ஏலத் தான்றொழு

  வார்க்கிட ரில்லையே.  2 

 

 

துணிவண் ணச்சுட

  ராழிகொள் வானெண்ணி

அணிவண் ணத்தலர்

  கொண்டடி யர்ச்சித்த

மணிவண் ணற்கருள்

  செய்தவன் மாற்பேறு

பணிவண் ணத்தவர்க்

  கில்லையாம் பாவமே.  3 

 

 

தீத வைசெய்து

  தீவினை வீழாதே

காதல் செய்து

  கருத்தினில் நின்றநன்

மாத வர்பயில்

  மாற்பேறு கைதொழப்

போது மின்வினை

  யாயின போகுமே.  4 

 

 

வார்கொள் மென்முலை

  மங்கையொர் பங்கினன்

வார்கொள் நன்முர

  சம்மறை யவ்வறை

வார்கொள் பைம்பொழில்

  மாற்பேறு கைதொழு

வார்கள் மன்னுவர்

  பொன்னுல கத்திலே.  5 

 

 

பண்டை வல்வினை

  பற்றறுக் கும்வகை

உண்டு சொல்லுவன்

  கேண்மின் ஒளிகிளர்

வண்டு சேர்பொழில்

  சூழ்திரு மாற்பேறு

கண்டு கைதொழத்

  தீருங் கவலையே.  6 

 

 

மழுவ லான்றிரு

  நாமம் மகிழ்ந்துரைத்

தழவ லார்களுக்

  கன்புசெய் தின்பொடும்

வழுவி லாவருள்

  செய்தவன் மாற்பேறு

தொழவ லார்தமக்

  கில்லை துயரமே.  7 

 

 

முன்ன வனுல

  குக்கு முழுமணிப்

பொன்ன வன்றிகழ்

  முத்தொடு போகமாம்

மன்ன வன்றிரு

  மாற்பேறு கைதொழும்

அன்ன வரெமை

  யாளுடை யார்களே.  8 

 

 

வேட னாய்விச

  யன்னொடும் எய்துவெங்

காடு நீடுகந்

  தாடிய கண்ணுதல்

மாட நீடுய

  ருந்திரு மாற்பேறு

பாடு வார்பெறு

  வார்பர லோகமே.  9 

 

 

கருத்த னாய்க்கயி

  லாய மலைதனைத்

தருக்கி னாலெடுத்

  தானைத் தகரவே

வருத்தி யாரருள்

  செய்தவன் மாற்பேறு

அருத்தி யாற்றொழு

  வார்க்கில்லை அல்லலே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

கல்லுளிச் சித்தர்
View Details
காரி நாயனார்
View Details
உக்கிர பாண்டியனுக்கு வளையம்ரூபவ் வேல்ரூபவ் சண்டாயுதம் கொடுத்தல்
View Details