ஏழாம்-திருமுறை

011 திருவுடை யார்திரு

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : பூவணம்

திருச்சிற்றம்பலம்

 

திருவுடை யார்திரு

  மால்அய னாலும்

உருவுடை யார்உமை

  யாளைஓர் பாகம்

பரிவுடை யார்அடை

  வார்வினை தீர்க்கும்

புரிவுடை யார்உறை

  பூவணம் ஈதோ.  1 

 

 

எண்ணி இருந்து

  கிடந்தும் நடந்தும்

அண்ண லெனாநினை

  வார்வினை தீர்ப்பார்

பண்ணிசை யார்மொழி

  யார்பலர் பாடப்

புண்ணிய னார்உறை

  பூவணம் ஈதோ.  2 

 

 

தெள்ளிய பேய்பல

  பூதம வற்றொடு

நள்ளிருள் நட்டம

  தாடல் நவின்றோர்

புள்ளுவ ராகும்அ

  வர்க்கவர் தாமும்

புள்ளுவ னார்உறை

  பூவணம் ஈதோ.  3 

 

 

நிலனுடை மான்மறி

  கையது தெய்வக்

கனலுடை மாமழு

  ஏந்தியோர் கையில்

அனலுடை யார்அழ

  கார்தரு சென்னிப்

புனலுடை யார்உறை

  பூவணம் ஈதோ.  4 

 

 

நடையுடை நல்லெரு

  தேறுவர் நல்லார்

கடைகடை தோறிடு

  மின்பலி என்பார்

துடியிடை நன்மட

  வாளடு மார்பில்

பொடியணி வார்உறை

  பூவணம் ஈதோ.  5 

 

 

மின்னனை யாள்திரு

  மேனிவி ளங்கவொர்

தன்னமர் பாகம

  தாகிய சங்கரன்

முன்னினை யார்புரம்

  மூன்றெரி யூட்டிய

பொன்னனை யான்உறை

  பூவணம் ஈதோ.  6 

 

 

மிக்கிறை யேயவன்

  துன்மதி யாலிட

நக்கிறை யேவிர

  லாலிற வூன்றி

நெக்கிறை யேநினை

  வார்தனி நெஞ்சம்

புக்குறை வான்உறை

  பூவணம் ஈதோ.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

சீரின் மிகப்பொலி

  யுந்திருப் பூவணம்

ஆரவி ருப்பிட

  மாஉறை வான்றனை

ஊரன் உரைத்தசொன்

  மாலைகள் பத்திவை

பாரில் உரைப்பவர்

  பாவம் அறுப்பரே.  10 

 

திருச்சிற்றம்பலம்