அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : திரைலோக்கிய சுந்தரம்
திருச்சிற்றம்பலம்
நீரோங்கி வளர்கமல
நீர்பொருந்தாந் தன்மையன்றே
ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு)
அருவினையேன் திறம்மறந்தின்(று)
ஊரோங்கும் பழிபாரா(து)
உன்பாலே விழுந்தொழிந்தேன்
சீரோங்கும் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 1
நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே
ஐயா !நீ உலாப்போந்த
அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி
கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 2
அம்பளிங்கு பகலோன்பால்
அடைப்பற்றாய் இவள்மனத்தில்
முன்பளிந்த காதலும்நின்
முகத்தோன்ற விளங்கிற்றால்
வம்பளிந்த கனியே !
என் மருந்தே ! நல் வளர்முக்கண்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே ! 3
மைஞ்ஞின்ற குழலாள்தன்
மனந்தரவும் வளைதாராது
இஞ்ஞின்ற கோவணவன்
இவன்செய்தது யார்செய்தார்
மெய்ஞ்ஞின்ற தமர்க்கெல்லாம்
மெய்ஞ்ஞிற்கும் பண்பினுறு
செய்ஞ்ஞன்றி யிலன்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 4
நீவாரா(து) ஒழிந்தாலும்
நின்பாலே விழுந்தேழை
கோவாத மணிமுத்தும்
குவளைமலர் சொரிந்தனவால்;
ஆவா !என்று அருள் புரியாய்
அமரர்கணம் தொழுதேத்தும்
தேவா !தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 5
முழுவதும்நீ ஆயினும் இம்
மொய்குழலாள் மெய்ம்முழுதும்
பழுதெனவே நினைந்தோராள்
பயில்வதும்நின் ஒரு நாமம்
அழுவதும்நின் திறம்நினைந்தே
அதுவன்றோ பெறும்பேறு
செழுமதில்சூழ் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 6
தன்சோதி எழுமேனித்
தபனியப்பூஞ் சாய்க்காட்டாய்
உன்சோதி எழில்காண்பான்
ஒலிடவும் உருக்காட்டாய்
துஞ்சாகண் இவளுடைய
துயர்தீரு மாறுரையாய்
செஞ்சாலி வயற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 7
அரும்பேதைக்(கு) அருள்புரியா(து)
ஒழிந்தாய்நின் அவிர்சடைமேல்
நிரம்பாத பிறைதூவும்
நெருப்பொடுநின் கையிலியாழ்
நரம்பாலும் உயிர்ஈர்ந்தாய்
நளிர்புரிசைக் குளிர்வனம்பா
திரம்போது சொரிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 8
ஆறாத பேரன்பின்
அவருள்ளம் குடிகொண்டு
வேறாகப் பலர்சூழ
வீற்றிருத்தி அதுகொண்டு
வீறாடி இவள்உன்னைப்
பொதுநீப்பான் விரைந்தின்னம்
தேறாள்தென் பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 9
சரிந்ததுகில் தளர்ந்தஇடை
அவிழ்ந்தகுழல் இளந்தெரிவை
இருந்தபரி(சு) ஒருநாள்கண்(டு)
இரங்காய்எம் பெருமானே !
முரிந்தநடை மடந்தையர் தம்
முழங்கொலியும் வழங்கொலியும்
திருந்துவிழ(வு) அணிகோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 10
ஆரணத்தேன் பருகிஅருந்
தமிழ்மாலை கமழவரும்
காரணத்தின் நிலைபெற்ற
கருவூரன் தமிழ்மாலை
பூரணத்தால் ஈரைந்தும்
போற்றிசைப்பார் காந்தாரம்
சீரணைத்த பொழிற்கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே. 11
திருச்சிற்றம்பலம்