ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

023 பவளமால் வரையைப்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) 

  அனையதோர் படரொளிதரு திருநீறும்

குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் 

  துன்றுபொற் குழல்திருச் சடையும்

திவள மாளிகை சூழ்தரு 

  தில்லையுள்திரு நடம்புரி கின்ற

தவள வண்ணனை நினைதொறும் 

  என்மனம் தழல்மெழு(கு)ஒக் கின்றதே.  1 

 

 

ஒக்க ஒட்டந்த அந்தியும் 

  மதியமும் அலைகடல் ஒலியோடு

நெக்கு வீழ்தரு நெஞ்சினைப் 

  பாய்தலும் நிறையழிந்(து) இருப்பேனைச்

செக்கர் மாளிகை சூழ்தரு 

  தில்லையுள் திருநடம் வகையாலே

பக்கம் ஒட்டந்த மன்மதன் 

  மலர்க்கணை படுந்தொறும் அலந்தேனே.  2 

 

 

அலந்து போயினேன் அம்பலக் 

  கூத்தனே அணிதில்லை நகராளீ

சிலந்தியை அரசாள்க என்(று) 

  அருள்செய்த தேவதே வீசனே

உலந்தமார்க் கண்டிக் காகிஅக் 

  காலனை உயிர்செக வுதைகொண்ட

மலர்ந்த பாதங்கள் வனமுலை 

  மேலொற்ற வந்தருள் செய்யாயே.  3 

 

 

அருள்செய்(து) ஆடுநல் அம்பலக் 

  கூத்தனே ! அணிதில்லை நகராளீ

மருள்செய்(து) என்றனை வனமுலை 

  பொன்பயப் பிப்பது வழக்கமோ

திரளும் நீள்மணிக் கங்கையைத் 

  திருச்சடைச் சேர்த்திஅச் செய்யாளுக்(கு)

உருவம் பாகமும் ஈந்துநல் 

  அந்தியை ஒண்ணுதல் வைத்தோனே.  4 

 

 

வைத்த பாதங்கள் மாலவன் 

  காண்கிலன் மலரவன் முடிதேடி

எய்த்து வந்திழிந்(து) இன்னமும் 

  துதிக்கின்றார் எழில்மறை அவற்றாலே 

செய்த்தலைக் கமலம் மலர்ந்தோங்கிய 

  தில்லை அம்பலத் தானைப்

பத்தியாற் சென்று கண்டிட 

  என்மனம் பதைபதைப்(பு) ஒழியாதே.  5 

 

 

தேய்ந்து மெய்வெளுத்(து) அகம் வளைந்து 

  அரவினை அஞ்சித்தான் இருந்தேயும்

காய்ந்து வந்துவந்(து) என்றனை 

  வலிசெய்து கதிர்நிலா எரிதூவும்

ஆய்ந்த நான்மறை அந்தணர் 

  தில்லையுள் அம்பலத்(து) அரன்ஆடல்

வாய்ந்த மாமலர்ப் பாதங்கள் 

  காண்பதோர் மனத்தினை உடையேற்கே.  6 

 

 

உடையும் பாய்புலித் தோலும்நல் 

  அரவமும் உண்பதும் பலிதேர்ந்து

விடைய(து) ஊர்வதும் மேவிடங் 

  கொடுவரை, ஆகிலும் என்நெஞ்சம்

மடைகொள் வாளைகள் குதிகொளும் 

  வயல்தில்லை அம்பலத்து அனலாடும்

உடைய கோவினை அன்றிமற்று 

  ஆரையும் உள்ளுவது அறியேனே.  7 

 

 

அறிவும் மிக்கநல் நாணமும் 

  நிறைமையும் ஆசையும் இங்குள்ள

உறவும் பெற்றநற் றாயொடு 

  தந்தையும் உடன்பிறந் தவரோடும்

பிறிய விட்டுனை அடைந்தனன் 

  ஏன்றுகொள் பெரும்பற்றப் புலியூரின்

மறைகள் நான்கும்கொண் டந்தணர் 

  ஏத்தநன் மாநடம் மகிழ்வானே.  8 

 

 

வான நாடுடை மைந்தனே ! 

  ஓஎன்பன் வந்தரு ளாய் என்பன்

பால்நெய் ஐந்துடன் ஆடிய 

  படர்சடைப் பால்வண்ணனேஎன்பன்

தேனமர் பொழில் சூழ்தரு 

  தில்லையுள் திருநடம் புரிகின்ற

ஏன மாமணிப் பூணணி 

  மார்பனே ! எனக்கருள் புரியாயே.  9 

 

 

புரியும் பொன்மதில் சூழ்தரு 

  தில்லையுள் பூசுரர் பலர்போற்ற

எரிய(து) ஆடும்எம் ஈசனைக் 

  காதலித்(து) இனைபவள் மொழியாக

வரைசெய் மாமதில் மயிலையர் 

  மன்னவன் மறைவல திருவாலி

பரவல் பத்திவை வல்லவர் 

  பரமன(து) அடியிணை பணிவாரே.  10

 

திருச்சிற்றம்பலம்