முதல்-திருமுறை

090 அரனை உள்குவீர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : திருவிருக்குக்குறள்

திருச்சிற்றம்பலம்

 

அரனை உள்குவீர், பிரம னூருளெம்

பரனை யேமனம், பரவி உய்ம்மினே.  1 

 

காண உள்குவீர், வேணு நற்புரத்

தாணு வின்கழல், பேணி உய்ம்மினே.  2 

 

நாதன் என்பிர்காள், காதல் ஒண்புகல்

ஆதி பாதமே, ஓதி உய்ம்மினே.  3 

 

அங்கம் மாதுசேர், பங்கம் ஆயவன்

வெங்குரு மன்னும், எங்க ளீசனே.  4 

 

வாணி லாச்சடைத், தோணி வண்புரத்

தாணி நற்பொனைக், காணு மின்களே.  5 

 

பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்

ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே.  6 

 

கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்

அரசை நாடொறும், பரவி உய்ம்மினே.  7 

 

நறவம் ஆர்பொழிற், புறவ நற்பதி

இறைவன் நாமமே, மறவல் நெஞ்சமே.  8 

 

தென்றில் அரக்கனைக், குன்றிற் சண்பைமன்

அன்று நெரித்தவா, நின்றுநினைமினே.  9 

 

அயனும் மாலுமாய், முயலுங் காழியான்

பெயல்வை யெய்திநின், றியலும் உள்ளமே.  10 

 

தேரர் அமணரைச், சேர்வில் கொச்சைமன்

நேரில் கழல்நினைந், தோரும் உள்ளமே.  11 

 

தொழும னத்தவர், கழும லத்துறை

பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 12

 

திருச்சிற்றம்பலம்