பத்தாம்-திருமுறை

2ம் தந்திரம் - 19. திருக்கோயில்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்

ஆவதன் முன்னே அரசு நிலைகெடும்

சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்

காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே.  1 

 

 

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்

வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை

முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்

வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே.  2 

 

 

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.  3 

 

 

முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரி1 வளம்குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே.  4 

 

 

பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்

பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே

சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.  5 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஏயர்கோன் கலிக்காம நாயனார்
View Details
போகர்
View Details
கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details