பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 01. சுத்த சைவம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஊரும் உலகமும் ஓக்கப் படைக்கின்ற

பேரறி வாளன் பெருமை குறித்திடின்

மேருவும் மூவுல காளி யிலங்கெழுந்

தாரணி நால்வகைச் சைவமு மாமே.  1 

 

 

சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு

சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த

சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்ற

நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.  2 

 

 

கற்பன கற்றுக் கலைமன்னு மெய்யோகம்

முற்பத ஞான முறைமுறை நண்ணியே

சொற்பத மேவித் துரிசற்று மேலான

தற்பரங் கண்டுளோர் சைவசித் தாந்தரே.  3 

 

 

வேதாந்தஞ் சுத்தம் விளங்கிய சித்தாந்த

நாதாந்தங் கண்டோர் நடுக்கற்ற காட்சியர்

பூதாந்த போதாந்த மாகப் புனஞ்செய்ய

நாதாந்த பூரணர் ஞானநே யத்தரே.  4 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

வலையன் மகளை மணத்தல்
View Details
தடாதகைப் பிராட்டியாரின் பிறப்பு
View Details
பிட்டுக்கு மண் சுமத்தல்
View Details